செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014
 

ஓட்டமாவடியில் போலி சாரதி அனுமதி பத்திர நிலையம் முற்றுகை

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போலி சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச்சீட்டு, உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்த நிலையமொன்றை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, பல போலி ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று இலங்கை போக்குவரத்து சபைகளின் டிப்போக்களில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஜந்து பேரை சவளக்கடை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

சவளக்கடை போக்குவரத்து பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கையை கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிள் மற்றும்  உழவு இயந்திரம் ஆகியவற்றின் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை சோதனை செய்த போது போலி சாரதி அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்படடு விசாரணை நடத்தியதையடுத்து,  அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று டிப்போக்களில் கடமையாற்றும் இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்னர்

அதன்பின் ஓட்டுமாவடி பிரதேசத்திலுள்ள போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் இன்று காலை முற்றுகையிட்டனர்.

இதன்போது, ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், கடவுச்சீட்டுக்கள் உட்பட பல ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 1503

Comments   

 
-0 +0 # meenavan 2012-02-28 06:35
பேராசை பெரும் தரித்திரம் என்பதை போக்குவரத்து சபை ஊழியர்கள் இருவரும் அறியவில்லை போலும்.
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.