(வ.சக்திவேல்)
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று நண்பகல் 12.24 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டர் சைகிளும் பஸ் வண்டியும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்ரன.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரான குலசிறி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

