.jpg)
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம- 5ஆம் கிராமத்தில் கடந்த 2011ஆம் ஆண்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட விவசாயக் கிணறு மற்றும் பல்தேவைக் கட்டிடம் என்பவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
மத்திய முகாம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரண் கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.பொன்னம்பலம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)

