(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொலணிப் பகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கே.எம்.முபீத் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
இந்த மக்கள் தினசரி எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக மாநகரசபை உறுப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் கொலணிப் பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடிய இவர், அம்மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
காட்டு யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாநகரசபை உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடியதுடன், வெள்ள அனர்த்தத்தினால் சிதைவுற்று போக்குவரத்து செய்யமுடியாதுள்ள பாதையையும் ஆற்றுமண் நெற்பயிர்களை மூடி சேதப்படுத்தியுள்ளதனையும் மாநகரசபை உறுப்பினர் பார்வையிட்டார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.


Comments
RSS feed for comments to this post