அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்ற விவசாயிகளின் துயரினை துடைக்க எந்த ஒரு அரசியல்வாதியும் முன்வருவதில்லை. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று அமைச்சர்களும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் இருந்தும் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதுள்ளதாக தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச சபை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அம்பாறை மாவட்டத்தில் காலா காலம் மூவின விவசாயிகள் தமது அறுவடை செய்த நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமப்படுகின்றனர். அரசாங்கமும் உரிய வேளைக்கு நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதுமில்லை.
விவசாயிகள் வெளிச் சந்தையில் நெல்லை விற்பனை செய்து விட்டு இருக்கும் போதே அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும். வெளி சந்தையில் விவசாயிகள் 65.5 கிலோ நிறையுள்ள ஒரு மூடை நெல்லை 1000 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றனர்.
அப்பணத்தை உரிய வேளைக்கு வழங்குவதுமில்லை. இருந்தும் அரிசியின் விலையிலும் எதுவித மாற்றமும் கிடையாது.
இவ்வாறான நிலையில் அம்;பாறை மாவட்டத்தில் மூன்று அமைச்சர்களும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் இருந்தும் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை.
இவர்கள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர். அக்ரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளராக உள்ளமையினால், இது எனது பொறுப்பென உணர்ந்து முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் அமைச்சர்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் கைகூடவில்லை.
எனவே, விவசாயிகளிடம் மீதியாக உள்ள நெல்லை கொள்வனவு செய்யுமாறும் எதிர்வரும் காலங்களில் உரிய வேளைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் நான் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
அத்துடன் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.
.gif)

Comments
முதலில் விவசாயிகளுக்கான மாணியங்கள் முறையாக வழங்கப்படுகின்றதா என்று பாருங்கள். ஹக்கீம் சேர் நீங்கள் உங்கள் பிரதேச சபை நிர்வாகத்தை சரியாக்குங்கள்.
சும்மா சொல்லக்கூடாது! நல்ல அரசியல் ஞானம்!
அடுத்து....
RSS feed for comments to this post