வெள்ளிக்கிழமை, 18 மே 2012

கஞ்சா போதை பொருளை வைத்திருந்தவர்களுக்கு 18 ஆயிரம் ரூபா அபராதம்

 

(எஸ்.மாறன்)

 

திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்க 18 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இருவர் கூலிவேலைக்காக வந்து திருக்கோவில் பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் 2600 மில்லிக்கிராம், 1400 மில்லிக்கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி  தலா 9 ஆயிரம் ரூபா வீதம் 18 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Views: 156

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.