(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவருக்கு 30 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவரை கடந்த வாரம் திருக்கோவில் பொலிஸார் மதுபானத்துடன் கைது செய்ததுடன் பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், மேற்படி நபர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜயர்படுத்தியபோது நீதிபதி தலா 15 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

