(எஸ்.மாறன்)
அம்பாறை, தம்பிலுவில் பிரதேசத்தில் மதுபோதையில் பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 15ஆம் திகதி மதுபோதையில் பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த போது திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜயர்படுத்திய போது இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

