வெள்ளிக்கிழமை, 18 மே 2012

போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் பஸ் செலுத்தியவர் கைது

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் போலியான சாரதி அனுமதிப்பத்திரத்துடன் தனியார் போக்குவரத்து பஸ்வண்டியை செலுத்திய மண்டூரை சேர்ந்த சாரதி ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

கல்முனை நகருக்கும் மத்தியமுகாம் 13ஆம் கொலனி பிரதேசத்திற்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்வண்டியை நேற்று செவ்வாய்க்கிழமை காலை சவளக்கடை வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் வீதியில் வைத்து சோதனையிட்டனர்.

இதன்போது சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சந்தேகம் கொண்டு விசாரித்தபோது அது போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

சிறியரக வாகனம்  மட்டும் செலுத்தக்கூடியதான அனுமதிபத்திரத்தில், கனரக வாகனம் உட்பட எல்லா வாகனமும் செலுத்தக்கூடியதாக ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸாரின்  விசாரணையில்
தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில்  இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் மாச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி
உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Views: 509

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.