.
வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014
 

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமணல் ஏற்றியவருக்கு தண்டம்

 

(எஸ்.மாறன்)
 
அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி உழவு இயந்திரத்தில் ஆற்றுமணல் ஏற்றிய ஒருவருக்கு 5,000 ரூபா தண்டம் விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

ஆற்றுமணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில்  உழவு இயந்திரத்தில் ஆற்றுமணல் ஏற்றிய ஒருவரை கடந்த 7ஆம் திகதி உழவு இயந்திரத்துடன் கைதுசெய்த பொலிஸார்,  அவரைப் பிணையில் விடுவித்தனர்

இந்நபர் நேற்றையதினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

Views: 1389

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.