(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்டத்தின் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரிப்பத்தாஞ்சேனையில் 50 பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரை தமண பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க அமரசேனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் 50 பக்கெட் ஹெரோயினுடன் சந்தேக நபரையும் கைது செய்து அக்கரைப்பற்று பதில் நீதவான் எம்.றஸீட் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

