வெள்ளிக்கிழமை, 18 மே 2012

43 இந்திய மீனவர்கள் திருமலையிலிருந்து இந்தியாவுக்கு திரும்பினர்

 

 

(கஜன்)

கடந்த புதன்கிழமை புல்மோட்டை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43  இந்திய மீனவர்களும் நேற்று மாலை திருகோணமலையிலிருந்து இந்தியாவுக்கு பயணமாகினர்.

இம் மீனவர்களை விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து இம் மீனவர்கள் தமது 6 படகுகள் சகிதம்  நேற்று மாலை இந்தியா நோக்கி பயணமாகினர்.

இவர்களை  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் திருகோணமலை இறங்கு துறையில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.



 

Views: 387

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.