வெள்ளிக்கிழமை, 18 மே 2012

92 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

 

 

(அமதோரு அமரஜீவ, ரமன்)

கிழக்கு மாகாண அரச சேவையில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 92 முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு  நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை மூலம் மேற்படி முகாமைத்துவ உதவியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

புதிய முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம வழங்கிவைத்தார்.

திருகோணமலை உப்புவெளியில் உள்ள மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண பதில் முதலமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Views: 311

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.