வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு

 

(எம்.பரீட்)    

 

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எஸ்.ஏ.மானாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ருப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி ஆணையாளர் திணைக்களத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் இம்முத்திரை முலம் மாதாந்தம் 200 ரூபாவிற்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 3,265 குடும்பங்களுக்கு இந்த மண்ணெண்ணெய் முத்திரை தேவையுடையவர்களாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: 354

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.