சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

வெருகல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை சுனாமி ஒத்திகை

(சி.குருநாதன்)

இலங்கை இராணுவம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்து ஒருங்கிணைப்பு பிரிவு ஆகியவற்றின் அனுசரனையுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுனாமி அபாயத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒத்திகை இடம்பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தெற்கே உள்ள வெருகல் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நான்கு கரையோர கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் ஒருங்கிணைப்பார் எம்.எம்.எம்.முஹைஜீர் தெரிவித்தார்.

இது போன்ற சுனாமி ஒத்திகை நிகழ்வு இறுதியாக குச்சவெளி பிரதேச செயலாளர்  பிரிவிலுள்ள ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Views: 1206

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.