.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டியில் இயங்கும் மலையக கலை கலாசார இயக்கத்தின் இரத்தினதீபம் அமைப்பு 17ஆவது வருடமாக நடத்திய இரத்தினதீபம் விருது வழங்கும் விழா கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரீட்சைகளில் திறமைச் சித்தி பெற்ற பாடசாலை மாணவர்கள், சாதனையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவர்களுக்கான விருதுகளை வழங்கிவைத்தார். இதன்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
.jpg)

