வெள்ளிக்கிழமை, 18 மே 2012

அமைச்சரின் உறவினர் எனக்கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

 

(மொஹொமட் ஆஸிக்)

அமைச்சர் ஒருவருடைய உறவினர் என கூறி அரச நிறுவனங்களில் தொழில் பெற்று தறுவதாக பலரிடமிருந்து இலட்சக் கணக்கான ரூபாய்களை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கண்டி உடதும்பறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நிலையில் பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

மேற்படி நபர் அரச வேலை வாய்ப்புகளை பெற்று கொடுப்பதற்காக கூறி பல இலட்சம் ரூபாய்களை பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நபர் மோசடி செய்துள்ள மொத்த தொகை பற்றியோ பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலோ சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என அலவத்துகொடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர்.எஸ் பண்டார தெரிவித்தார்.

இச்சந்தேக நபரை கண்டி பதில் நீதவான் தனூஜா ஜயதுங்க முன் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Views: 94

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.