வெள்ளிக்கிழமை, 18 மே 2012

சிவனொளிபாதமலை யாத்ரீகர்களுக்காக கொழும்பு - ஹட்டன் விசேட ரயில் சேவை

 

(ஆர்.கமலி)

சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரீகர்களின் வசதி கருதி  ஹட்டனுக்கும் கொழும்புக்குமிடையிலான விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

இதற்கிணங்க சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் இந்த ரயில் சேவை செயற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

'கொழும்பு கோட்டையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 2.00 மணிக்கு ஹட்டன் ரயில் நிலையத்தை சென்றடையும். குறித்த ரயில்இரவு 10.00 மணிக்கு ஹட்டனிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ரயில் சேவையானது மே 6ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Views: 191

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.