வெள்ளிக்கிழமை, 18 மே 2012

அம்புலுவாவ காட்டுப்பகுதியில் தீ; 200 ஏக்கர் காடு நாசம்

 

அம்புலுவாவ காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளதால் அக்காட்டுப்பகுதியின் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது.

இலங்கை விமானப்படையினரின் இரு பெல் 212 ரக ஹெலிகொப்டர்கள் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையமும் கம்பளைப் பொலிஸாரும்  இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி தீயணைப்புப் படையினர் இரு தீயணைக்கும் ட்ரக் வண்டிகளை அனுப்பிவைத்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.(எஸ்.டி)

Views: 346

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.