வெள்ளிக்கிழமை, 18 மே 2012

250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி; சாரதி படுகாயம்

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

புபுரஸ்ஸ மீகஹமுள்ள பகுதியிலுள்ள 250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த குடும்பஸ்தரொருவர் பலியானதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கம்பளை தெல்பிடிய பகுதியைச் சேர்ந்த எம்.ரஸ்லான்  (வயது 42) என்ற குடும்பஸ்தரே பலியானவராவர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை புபுரஸ்ஸையில் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு கம்பளை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம்  தொடர்பில் கம்பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 115

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.