"கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக இ,தொ.க. கடும் நடவடிக்கை"
23-02-2012 05:10 PM
Comments - 0       Views - 290

 

தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பழுவை தன்னிச்சையாக அதிகரிக்கவோ அல்லது அவர்களுக்கு கிடைக்கக் கூடிய வரப்பிரசாதங்களுக்கு அநீதிகள் விளைவிக்கவோ தோட்ட நிர்வாகங்களுக்கு எவ்விதத்திலும் அனுமதி கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இ.தொ.கா. விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கூட்டு ஒப்பந்தத்திற்கமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்கள் இதனைத் தவறும் பட்சத்தில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியமும், அவசரமும் இ.தொ.கா.வுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் பொகவந்தலாவை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கெடுபிடிகள், அநீதிகள் இவற்றை இ.தொ.கா. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஒரு நாளில் பறிக்கப்படும் கொழுந்தின் அளவை தோட்டத் தலைவர்கள், தலைவிகள் தீர்மானிக்கும்போது அதிகரிக்கவோ அல்லது சம்பளத்தைக் குறைக்கவோ நிர்வாகங்களுக்கு எவ்விதத்திலும் உரிமை கிடையாது.

எவ்வாறாயினும் இதுவரையிலும் இத்தோட்டங்களில் பெற்ற கொழுந்திற்கான பணம் உரியவர்களுக்கு உடன் வழங்கப்பட வேண்டும். 2011ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 23 கம்பனிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து தோட்டப் பிரிவுகளில் உள்ள தோட்டத் தலைவர்கள், தலைவிகள், தோட்டக் கமிட்டிகள், தோட்ட அதிகாரிகள் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென இ.தொ.கா. ஏற்கனவே நிர்வாகங்களுக்கு வலியுறுத்தியிருந்தது.

ஆனால் இதனை நிர்வாகங்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறான நிலைமைகளை இ.தொ.கா. பலமுறை எடுத்துக்கூறி வந்திருக்கின்றது. கூட்டு ஒப்பந்;தத்தில் குறிப்பிட்டவாறு அனைத்து சலுகைகளையும் வழங்கியே ஆக வேண்டும்.

அப்படி தவறுகின்ற தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இ.தொ.கா தோட்ட நிர்வாகங்களுக்கு உறுதிபட எச்சரித்துள்ளது. அதேவேளை கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளது.

""கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக செயற்படும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக இ,தொ.க. கடும் நடவடிக்கை"" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty