பதுளையில் உணவு ஒவ்வாமை காரணமாக 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி
27-02-2012 09:48 PM
Comments - 0       Views - 278

 

(ஆர்.கமலி)

உணவு ஒவ்வாமை காரணமாக பதுளை, பசறை பகுதியில் 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பசறை, டைனாவத்தை  ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற பூஜையின் பின்னர் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே இவ்வாறு  ஒவ்வாமை காரணமாக பசறை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்   

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக பசறை வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

"பதுளையில் உணவு ஒவ்வாமை காரணமாக 26 பேர் வைத்தியசாலையில் அனுமதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty