செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

சிலாபத்தில் 8 பேர் கைது

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் மற்றும் மாரவில பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் நேற்று சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் பெண் ஒருவரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள சுமார் 25 க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுடன் இவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பெரும் தொகைப் பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Views: 891

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.