வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

கொலைக்காரர்களாக நடித்து, பணம் கோரி மிரட்டிய 17 வயது மாணவர்கள் கைது

 

(ஸ்ரீநாத் பிரசன்ன ஜயசூரிய)

தாம் பாதாள உலகக் குழு அங்கத்தவர்கள் எனவும் செல்வந்த  வர்த்தகர் ஒருவரின் மகனை கொலை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக்கொண்டு அவ்வர்த்தகரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாடசாலை மாணவர்களான 17 வயது இளைஞர்கள் இருவரை கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச பாடசாலையொன்றின் மாணவரான, மேற்படி வர்த்தகரின் மகனை கொல்வதற்காக தாம் 50 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தில் உள்ளதாகவும் வர்தகரிடமும் அவரின் மனைவியிடமும் மேற்படி இளைஞர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். 

தமக்கு 3 லட்சம் ரூபா வழங்கப்பட்டால் வர்த்தகரின் 15 வயது மகனுக்கு தீங்கேதும் செய்யாமலிருக்கத் தயார் என மேற்படி இளைஞர்கள் கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மொரட்டுவையிலுள்ள முன்னிலை பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்களான மேற்படி இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர். இம்மாணவர்கள் க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் ஜேர்மனியில் நடைபெற்ற 1500 ஓட்டப்போட்டியில் தனது பாடசாலை சார்பாக பங்குபற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் இப்பெற்றோர், லுனாவையிலுள்ள இடமொன்றில் பணத்தை பெறுவதற்கு வருமாறு மேற்படி இளைஞர்களை அழைத்தனர். இவ்விளைஞர்கள் அங்கு வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 

Comments (1)கருத்து
...
written by meenavan, January 28, 2012
ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஓட்ட போட்டியில் பெற முடியாததை, கப்பம் பெறுவதன் மூலம் அடைய முற்பட்டு பாடசாலைக்கும், பெற்றோருக்கும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். விடலை பருவ மாணவரின் பின்புலம் பாதாள உலகினரும் உள்ளனரா என விரிவான விசாரணை அவசியம்.

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: