செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

நீர்கொழும்பு குதிரைப் பந்தய முகவர் நிலையத்தில் ஒருவர் குத்திக் கொலை

 

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு நகர மத்தியின் பிரதான வீதியில்  உள்ள குதிரைப் பந்தய முகவர் நிலையம் ஒன்றில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
 
நீர்கொழும்பைச் சேர்ந்த பேர்னாட் (வயது 55) என்பவரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

குதிரைப் பந்தயம் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு நண்பர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Views: 324

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.