ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014
 

தன்னை பற்றி போலி ஆபாச வீடியோ காண்பிப்பதாக கோட்டே மேயர் மீது பிரதிமேயர் வழக்கு

                                                                          (ரி.பாருக் தாஜுதீன்)

தன்னை பற்றிய போலி ஆபாச வீடியோவொன்றை உத்தியோகஸ்தர்களுக்கு காண்பித்ததாக கோட்டே மாநகர மேயர் ஜானக ரணவக்க மீது குற்றம் சுமத்தி அவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா நஷ்ட ஈடுகோரி பிரதி மேயர் மதுர விதானகே வழக்குத் தொடுத்துள்ளார்.

பிரதி மேயர் அப்பகுதியிலுள்ள கௌரவமான  குடும்பமொன்றை சேர்ந்தவர் எனவும் சமூக சேவையாளர் எனவும் கடந்த மாநகர சபைத் தேர்தலில் 7000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க அசோஷியேட்ஸ் சட்ட நிறுவனத்துக்கூடாக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர ஒப்பந்தங்களை கேள்விப்பத்திரமின்றி குறிப்பிட்ட சில நபர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பாக சபையில் தான் பலதடவை கேள்வி எழுப்பியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பழிவாங்கும் முகமாக, தன்னை பற்றி போலியாக தயாரிக்கப்பட்ட ஆபாச படமொன்றை   சபையின் உத்தியோகஸ்தர்களுக்கு மேயர் காண்பித்து வருவதாகவும் பிரதிமேயர் தெரிவித்துள்ளார். இவ்வீடியோவை காண்பிக்க வேண்டாம் என தடையுத்தரவு விதிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இவ்வழக்கை நீதிபதி ஜி.ஏ.டி. கணேபொல ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


Views: 2265

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.