வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014
 

நூதனசாலை திருட்டு தொடர்பில் திருப்புமுனை இல்லை

கொழும்பு தேசிய நூதனசாலையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதமாகின்றபோதிலும், சந்தேக நபர்கள் பற்றிய எந்தவித திருப்புமுனையோ அல்லது திருடப்பட்ட கலைப்பொருட்கள் பற்றிய விபரமோ இதுவரையில் இல்லையென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் 40 பேரிடம்;  வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இத்திருட்டுச் சம்பவத்துடன் அரசியல் ஈடுபாடு உள்ளதாக எழுந்துள்ள ஊகத்தை பொலிஸ் பேச்சாளர் மறுத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி கொழும்பு தேசிய நூதனசாலை உடைக்கப்பட்டு 8 வாள்கள், 18 மோதிரங்கள், 4 கைப்பிடிகள்  பல மில்லியன் பெறுமதியான நாணயங்கள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஹபீல் பரிஸ்)
Views: 1302

Comments   

 
-0 +0 # குமார் 2012-04-17 05:14
வேலியே பயிரை மேயும் போது திருப்புமுனை எப்படி வரும் ?
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.