ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014
 

உயர்மட்ட ஈரான் தூதுக்குழு இலங்கை விஜயம்

ஈரான் இஸ்லாமிய குடியரசில் இருந்து ஐவர் அடங்கிய தூதுக்குழுவொன்று எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

ஈரானின் சமகால அறிஞர்களுள் முக்கிய இடம் வகிப்பவரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு நிபுணர்கள் சவையின் உறுப்பினருமான ஆயத்துல்லாஹ் தஷ;கீரி தலைமையில் இலங்கை வரவுள்ள இக்குழுவில்  பல்வேறு துறைசார் நிபுணர்களும் உள்ளடங்குகின்றனர்.

கொழும்பில் பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்கவுள்ள இவர்கள், உள்ளூர் மார்க்க நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் ஆகியோரோடு முஸ்லிம்களிடையே ஒற்றுமையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இலக்கம் 06 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை கொழும்பு 07லுள்ள ஈரான் தூதரக கலாசாரப் பிரிவில் இடம்பெறவுள்ளது.
Views: 810

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.