இரவு நேரத்தில் வீதியில் திரிந்த சீனப் பெண்ணுக்கு 10 ரூபா அபராதம்
18-04-2012 05:21 PM
Comments - 1       Views - 666

(லக்மால் சூரியகொட)

 

காரணமின்றி இரவு நேரத்தில் வீதியில் சுற்றிக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பத்து ரூபாவை அபராதமாக செலுத்துமாறு கொழும்பு நீதிமன்றமொன்று இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.

கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் இரவு நேரத்தில் அலைந்து திரிந்த நிலையில் மேற்படி பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது தான் சுற்றித் திரிந்தமைக்கு முறையான காரணத்தை தெரிவிக்கவில்லையென  நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடோடி கட்டளைச்சட்டத்தின் பிரிவு 3 (பி) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றை அப்பெண் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதையடுத்து மேற்படி பெண் 10 ரூபாயை அபராதத் தொகையாக செலுத்தவேண்டுமென நீதிபதி கனிஷ்க விஜேரட்ன கட்டளையிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 7 ஆம் திகதியும் இதே நீதிமன்றினால் இதேபோன்ற குற்றத்திற்காக சீனப் பெண்ணொருவருக்கு 10 ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"இரவு நேரத்தில் வீதியில் திரிந்த சீனப் பெண்ணுக்கு 10 ரூபா அபராதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
neethan 18-04-2012 11:03 PM
வருடமொருமுறை பத்து ரூபா தண்டனை பெறும் சீன பெண்கள்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty