சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

பாடசாலை வான் சாரதி பிணையில் செல்ல அனுமதிப்பு

                                                                             (லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டியில் 10 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, பாடசாலை வான் சாரதியை  தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் இன்று அனுமதித்தார்.

 நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் தொடர்பான தடயவியல் மருத்துவ அறிக்கை கிடைத்தள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் கடுமையான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்தார்.

அதையடுத்து சந்தேக நபரை தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என சந்தேநபரை கடுமையாக அறிவுறுத்தினார்.  இவ்வழக்கு மே 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: 1560

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.