செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

வாகன விபத்தில் இருவர் பலி

 

(எம்.சீ.சபூர்தீன்)

மரதன்கடவள ஹபரன வீதியின் உல்பத்த பள்ளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியொன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த இருவர்  உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 134

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.