(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் ஒயாமடுவையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகத்தினுள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் சென்ற 35 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கண்காட்சிகூட வளாகத்தினுள் போதையில் செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் 35 பேரும் மதுபானம், கஞ்சா, அபின் உட்பட்ட போதைப்பொருட்களை உட்கொண்ட நிலையில் சென்றபோது, கண்காட்சி வளாகத்தினுள் இயங்கிவரும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டு ஒயாமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின் இவர்கள் 35 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஒயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
RSS feed for comments to this post