செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

வாகனத்தை சேதப்படுத்திய 20 பேருக்கு விளக்கமறியல்

 

 (ஆகில் அஹமட்)

வாகனமொன்றை  அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படட 20  சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் பிரதான நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவந்திக்கா மாறப்பன முன்னிலையில் நேற்று புதன்கிழமை இச்சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். 

கலன்பிந்துனுவெவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மாவத்தவெவ, மைலகஸ்வெவ கிராமத்தில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணறொன்று தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே முரண்பாடு தோன்றியதாகவும் இதன் காரணமாகவே வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  வாகனம்  அடித்துநொறுக்கப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் உரிமையாளர் எம்.சிரியலதா செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மைலகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த  ஒரே குடும்ப உறவினர்களான 20 பேரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Views: 171

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.