செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

காக்கப்பள்ளி வாகன விபத்தில் இருவர் காயம்

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

சிலாபம் - கொழும்பு வீதி, காக்கப்பள்ளி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் பிரதேச வைத்தியர் ஒருவர் தமது இரு மகனுடன் பயணித்த வேன் ஒன்று ஆரச்சிக்கட்டு பிரதேச லொறி ஒன்றுடன்  மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வேனில் பயணித்தவர்களே பலத்த காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனச் சாரதிகளுக்கு அறிவூட்டும் அறிவித்தல் பலகையிலும் வேன் மோதி நின்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 210

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.