செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

பாலர் பாடசாலைக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி கடத்தல்; முந்தலில் சம்பவம்

(எஸ்.எம்.மும்தாஜ்,இர்ஷாத் ரஹூமத்துல்லாஹ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், முந்தல் பிரதேசத்திலுள்ள  பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மூன்றரை வயதுச் சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக குறித்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மரணச் சடங்கொன்றுக்கு செல்லவேண்டியிருப்பதால் சிறுமியை அழைத்து வருமாறு அவரது தாய் கூறி அனுப்பியதாக குறித்த சிறுமியின் மாமா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவராலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரத்சந்திரன் ஸ்வஸ்திகா என்ற இச்சிறுமியின் தந்தை இத்தாலியில் கடமையாற்றுவதாகவும் குறித்த சிறுமி முச்சக்கர வண்டியொன்றிலேயே தினமும் பாடசாலைக்கு சென்று வருவதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிறுமியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் முந்தல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Views: 362

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.