.
புதன்கிழமை, 22 ஒக்டோபர் 2014

 

தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய 34 வருட நிறைவையொட்டி கண்காட்சி

 

(எ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 34ஆவது வருட நிறைவு தினத்தை முன்னிட்டு விசேட கல்விக் கண்காட்சியொன்று இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.ஹூதைலீன் தலைமையில் ஆரம்பமான இக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் 20 காட்சிக் கூடங்களில் கல்வி, வர்த்தகம், விவசாயம், அறிவியல், ஆன்மீகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் பெருந்திரளானோர் வருகை தருகின்றனர். 

Views: 1170

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.