பொலிஸார் துரத்திச் சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்து
29-03-2012 01:20 PM
Comments - 0       Views - 365
(எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.மும்தாஜ்)

பொலிஸார் துரத்திச்சென்ற கார் புத்தளம், பாலாவியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கீழ் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று மாலை நடைப்பெற்றது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த காரினை நிறுத்திய போது அந்த கார் நிறுத்தாமல் செல்லவே பொலிஸார் துரத்திச்சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் விபத்துக்குள்ளானதும் காரினுள் இருந்த இருவர் வெளியில் பாய்ந்து பார்சல் ஒன்றுடன் களப்பு வழியினூடாக தப்பி சென்றதாகவும், சாரதியினை கைது செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த காரில் கடல் அட்டை, பீலி வகைகள் கொண்டு வரப்பட்டதாக காரின் சாரதி கூறியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
"பொலிஸார் துரத்திச் சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்து " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty