சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் தென் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 8 பேர் மீனவர்களாவர். ஏனையோர் மரங்கள் முதலானவை விழுந்ததால் இறந்துள்ளனர். 5 படகுகளும் சேதமாகியுள்ளன. (கிரிஷான் ஜீவக்க ஜயருக், டீ.ஜீ சுகதபால)

