செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

கதிர்காமத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 5 வருடம் பழைமையானது: பொலிஸ்

 

கதிர்காமத்திலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது என்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் டப்ளியூ.ஏ.ஆர்.பெர்ணான்டோ தெரிவித்தார் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார். 

இந்நிலையில், மேற்படி தற்கொலை அங்கியானது யுத்தம் நிலவிய காலத்தில் குறித்த பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அண்மைக் காலங்களில் அது இங்கு கொண்டுவரப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் அத்தியட்சருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

 

 

Views: 368

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.