செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

 

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது.

2008 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நடைபெற்ற இம்மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக ஆனந்த் பாலகிட்ணரும் புதிய செயலாளராக அ.நிக்ஸனும் தெரிவாகினர். பொருளாளராக எஸ்.ஸ்ரீகஜன் மீண்டும் தெரிவானார்.

இம்மாநாட்டில் 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், இலங்கையின் சமகால ஊடகத்துறையின் நிலைவரம், ஊடகவியலாளர்கள் முன்னுள்ள கடமைகள், சவால்கள் , ஊடகக் கல்வியின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக உரை நிகழ்த்தினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், இலங்கையில் ஊடகவியலாளர்களையும் ஊடக உரிமைகளையும் பாதுகாப்பதில் ஊடக அமைப்புகளின் பங்;களிப்புகள் குறித்து உரையாற்றினார். விசேட விருந்தினராக கலந்துகொண்ட மூத்த  ஊடகவியாளர் ந.வித்தியாதரன் வாழ்த்துரை நிகழ்த்துகையில் ஊடகவியாளர்கள் தமது தொழில்கௌரவத்தை பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்த ஊடகவியலாளரான ந.குருபரன் லண்டனிலிருந்து தொலைபேசி மூலம்  இம்மாநாட்டில் உரைநிகழ்த்துகையில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்துக்கு புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் இம்மாநாடு நடைபெற்றது.  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தளத்தை இயக்குவதற்கும் ஒன்றியத்தினதும் ஊடகவியலாளர்களினதும் வளர்ச்சிக்கு பங்களிப்புகளை செய்ய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தயாராகவுள்ளதாகவும் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு:

தலைவர் : அனந்த பாலகிட்ணர்

செயலாளர் : அ.நிக்ஸன்

பொருளாளர் : எஸ்.ஸ்ரீகஜன்

பிரதி தலைவர் : கெனி ஜூட்சன்

உப தலைவர்கள் : ஏ.எல்.எம். சலீம், துஷியந்தினி கணகசபாபதிபிள்ளை

உப செயலாளர் : ஆர். சேதுராமன்

உப பொருளாளர் :எஸ்.ஜயந்திரன்

வடக்கு இணைப்பாளர் : ஏ.என்.எஸ். திருச்செல்வம்

கிழக்கு இணைப்பாளர்: எஸ். சரவணன்

மலையக இணைப்பாளர் : எம். செல்வராஜ்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் : ஆர். பாரதி, எஸ்.சிவராஜா, ஏ.பி.மதன், ஆ.யதீந்திரா, என். லிலியன், ஜீவா சதாசிவம், ஆர்.சிவராஜா, என். கபிலநாத், ஆர்.தயாபரன், சண்முகராஜா, எஸ்.தில்லைநாதன்.

Views: 727

Comments   

 
0#jeyarajah2012-02-19 17:39
நிர்வாகக் குழுத் தெரிவில் இருந்து அரசுடன் ஒத்து ஊத ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள் என்பது தெரிகின்றது.
Reply
 
 
0#JG STEVE2012-02-19 21:33
கலந்து கொள்ள முடியாது போனமைக்கு வருந்துகிறேன்.
Reply
 
 
0#Neshakumar2012-02-19 21:50
சாதாரண பதவிகளுடன் நீண்டகாலமாக ஒன்றியத்தின் செயற்பாட்டுக்காக உழைத்த அ.நிக்ஸன் செயலாளராக பதவியேற்றமை சிறப்பானது.

-நேசக்குமார், லன்டன்.
Reply
 
 
0#R.Thurairatnam, Swiss2012-02-20 00:26
கடந்த காலத்தில் பல நெருக்கடிகள் மத்தியிலும் மிக நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய நிர்வாக குழுவுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவிப்பதுடன் புதிய நிர்வாக குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆனந்த், நிக்ஸன், ஸ்ரீகஜன் உட்பட புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என நம்புகிறேன். 1999.மே 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடந்த 13வருட காலத்தில் யாருக்கும் ஒத்து ஊதியது கிடையாது. இனியும் அது தனது பணியை சிறப்பாகவே செய்யும். வாழ்த்துக்கள்
-துரைரத்தினம்
Reply
 
 
0#Kethis2012-02-20 02:14
ஜெயராஜா நீங்கள் யார், எங்கிருக்கிறீர்கள், பகிரங்கமாக வெளியில் வந்து அரசாங்கத்துக்கு எதிராக முழங்குங்கள் பார்ப்போம்.
Reply
 
 
0#KM Rasool2012-02-20 05:29
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் புத்துயிர் பெற்றுள்ளதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைவதுடன், கடந்த கால உறுப்பினர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.
Reply
 
 
0#jeyarajah2012-02-20 08:03
திரு கேதீஸ் அவர்களே. திரு பாலகிட்னர் ஒரு அரசு சார்பான பத்திரிகையின் ஊடகவியலாளர். அதனால்த்தான் அப்படி எழுதினேன். மக்களின் மனதில் சிந்தனைகளை ஏற்படுத்துவதே எனது நோக்கம். அரசை பாராட்டியும் எழுதுவேன். காலம் வரும் வெளியில் வருவேன். காத்திருக்கவும்.
Reply
 
 
0#varathan2012-02-20 22:06
அரச சார்பு பத்திரிகையில் பணியாற்றினால் அவர் பத்திரிகையாளர் இல்லையா?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.