ஹசகல பொலிஸ் நிலயைத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது பிரத்தியே மோட்டார் சைக்கிள்களுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம், வரிஅனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் ஆகியவற்றை வைத்திருக்காததால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளார்.
கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெலவின் உத்ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் உதவி இன்ஸ்பெக்டர்கள், சார்ஜன்ட்டுகள், கான்ஸ்டபிள்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். (சண்டே டைம்ஸ்)


Comments
RSS feed for comments to this post