செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

போலி மருத்துவர்களுக்கு ஐந்தாண்டு சிறை

 

(கெலும் பண்டார)

போலி மருத்துவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையை வழங்கும் புதிய சட்ட வரைபொன்றை சுகாதார அமைச்சர் தயாரித்து வருவதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி மருத்துவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன - தனது அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கிறார். இக்கலந்துரையாடலில் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களின் மூலம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போலி வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சின் உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. போலி வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமுகமாக குறைந்தது ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கும் விதத்தில் சட்ட வரைபொன்றை தயாரித்து, வெகு விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: 311

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.