(ரி.பாருக் தாஜுதின்)
ஐக்கிய தேசியக்கட்சியின் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்காக டிசெம்பர் 19, 2011 இல் நடந்த தேர்தல் சட்ட பூர்வமற்றது எனக்குறிப்பிட்டு அதை செல்லுப்படியற்றதாக்க வேண்டுமெனக் கோரி தென்மாகாணசபை உறுப்பினரான மைத்திரி குணரத்ன தாக்கல் செய்த மனுவுக்கு மே 9 ஆம் திககி ஆட்சேபம் தெரிவிப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் பிரதிநிதிவாதிகளாக ஐ.தே.கவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை சட்டப்பூர்வமானது அல்லவென்றும் டிசெம்பர் 19 ஆம் திகதி கட்சியில் உத்தியோகத்தர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவில்லையாதலால் இது கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளார்.

