.
திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014
 

முதலாவது பூகம்பத்தினால் பாரிய சுனாமி அலைகள் ஏற்படவில்லை

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பங்களினால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.  எனினும் இதுவரை எந்த நாட்டிலும் பாரிய  சுனாமி அலைகள் தாக்கவில்லை.

இந்தோனேஷிய கரையோரங்களில் 80 சென்ரி மீற்றர் (2.62அடி) உயரமான சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக அந்நாட்டு வளிமண்டலவியல் முகவரகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10 மணியளவில்  8.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது.

இதனால் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, உட்பட இந்து சமுத்திர நாடுகள் பலவற்றில் சுனாமி அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூகம்பம் மற்றும் சுனாமி எச்சரிக்கைகளையடுத்து பல நாடுகளில் மக்கள் பதற்றமடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர்.

எனினும் அப்பூகம்பத்தினால் பாரிய சுனாமி எதுவும்ஏற்படவில்லை. இந்தோனேஷிய கரையோரங்களழில் 2.62 அடி அளவிலான அலைகள் மாத்திரம் தாக்கின.

எனினும் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.15 மணியவில் 8.2 ரிச்சடர் அளவிலான மற்றொரு பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையை முழுமையாக வாபஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது பூகம்பத்தினால் சுனாமி அலைகள் ஏற்பட்டால் மாலை 6.45 மணியளவில் அவ்வலைகள் இலங்கையை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரை பூகம்பத்திற்கு அருகிலுள்ள இந்தோனேஷிய முதலான நாடுகளில் பாரிய சுனாமி அலைகள்  ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.Views: 2418

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.