கடத்தல் தொடர்பான தகவல்கள் முரண்பாடானவை: ஜே.வி.பி.
11-04-2012 04:01 PM
Comments - 0       Views - 393
முன்னிலை சோஷலிசக் கட்சியின் அங்கத்தவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான அனைத்து தகவல்களும் முரண்பாடானவை என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கூறினார்.

'இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும்  தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் முரண்பாடானவை. ஊடகங்களும் வெ வ் வேறு கதைகளை வெளியிட்டது. எனவே நாம் கருத்து கூறுவதற்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பான தெளிவான ஆதாரங்களுக்காக காத்திருக்க வேண்டும்' என்றார்.

அதேவேளை ஜே.வி.பியின் அரசியல் குழு அல்லது மத்திய குழுவில் குமார் குணரட்ணம் என்ற பெயரில் எவரும் ஒருபோதும் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

"கடத்தல் தொடர்பான தகவல்கள் முரண்பாடானவை: ஜே.வி.பி." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty