ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014
 

'பள்ளிவாசல் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்'

தம்புள்ள ரங்கிரி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் தராதரங்களுக்கு அப்பால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மதக் கடமைகளுக்கு செல்லவிடாது தடுத்தமை போன்ற ஈனத்தனமான செயல்களால் இலங்கையில் வாழும், சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நாட்டில் மதக் கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கு கூட, பெரும்பான்மை சமூகத்தின் சில கடும்போக்கு சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் இத்தோடு முடிவுக்குறியானதாக மாறும் அபாயம் ஏற்படலாம் என தாம் அச்சம் கொள்ளுவதாக" அமைச்சர றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த பள்ளிவாசல் மீது பௌத்த பிக்குகளால்   மேற்கொள்ளப்ட்ட தாக்குதல் சம்பவத்தை ஊடகங்கள் முழு சர்வதேசத்திற்கும் காண்பித்துள்ளன. அதனால் எமது நேச அரபு நாடுகள் இந்த சம்பவம் குறித்து கவலையடைந்துள்ளதாகவும் தொடர்ந்து இவ்வாறான  நிலையேற்படாதிருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கடும்போக்கு வானொலி .அலைவரிசையொன்று தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்குடன் செயற்படுவதாகவும் இந்த வானொலியின் அனுமதிப்பத்திரம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அத்துடன் ஊடக அமைச்சின் செயலாளர்  மற்றும் தொலைதொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை ஏற்கனவே தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த வானொலியின் அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்துமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Views: 2454

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.