சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

மற்றொரு லிபியாவாக களனியை மாற்ற அனுமதிக்க மாட்டேன் : மேர்வின்

மற்றொரு லிபியாவாக களினியை மாற்ற அனுமதிக்கப்போவதில்லை என  அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். களனி பிரதேச சபை உபதலைவரின் வீட்டின் மீது  இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் தான் இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த விரும்பும் சிலர் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு  எதிராக சதி செய்வதாக, அமைச்சரின் ஊடக செயலாளர் ரெஹான் விஜேரட்ன டெய்லி மிரரிடம் கூறினார்.

'மற்றொரு லிபியாவாக களனியை மாற்றுவதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை. களனியை நான் அபிவிருத்தி செய்யவதை யாரும் தடுக்க முடியாது' அமைச்சர் மேர்வின் சில்வா கூறியதாக ரெஹான் விஜேரட்ன தெரிவித்தார்.


Views: 2055

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.