நான் ஊடகங்கள் மீது அன்பு கொண்டவன்: அமைச்சர் மேர்வின் சில்வா
30-04-2012 05:09 PM
Comments - 0       Views - 591

(கே.என்.முனாஷா)


நான் ஊடகங்கள் மீது அதிக அன்பு கொண்டவன். இலங்கையில் ஊடகங்களில் பணியாற்றுவோர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே முன்னுதாரணமானவர்கள். எந்த விடயத்தை பற்றியும் எழுத அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.

அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆயினும் எல்லாம் முழுமையானவை என்று கூறக்கூடிய ஊடகம் எமது நாட்டில் இல்லை என்று மக்கள் தொடர்பு மற்றும் பொதுமக்கள் அலுவல்கள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அரச சேவையை கிராமத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஜனசெதம ஜனஹவுல' நடமாடும் மக்கள் சேவையில் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'என்னைப்பற்றி பிழையான தகவல்களை சில தேசிய ஊடகங்கள் வெளியிடுகின்றன. சில ஊடகவியலாளர்கள் எனக்கெதிராக பொய் செய்திகளை வெளியிடுகின்றனர்.

எனக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாக யாராவது நிரூபித்தால் தேர்தலில் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ள நான் எனது மக்களிடம் தெரிவித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவேன்' என்றும் கூறினார்.

"நான் ஊடகங்கள் மீது அன்பு கொண்டவன்: அமைச்சர் மேர்வின் சில்வா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty