ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014
 

அமைச்சர் மேர்வின் சில்வாவின் பொன்னான இரகசியம்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பென்ஷுய் சிலைகளை உபயோகப்படுத்துவதால், பொன், பொருள் உள்ளிட்ட அதிர்ஷ்டங்கள் வீடு வந்து சேரும் என்றும் அதற்கு தன்னை சிறந்த உதாரணமாகக் கொள்ளுமாறும் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.

பலாகல, பரவனகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வீர கெப்பட்டிபொல சிலையைத் திறந்துவைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பௌத்த விவகார அமைச்சின் செயலாளர் கெஷியன் ஹேரத்தும் கலந்துகொண்டிருந்தார்.

பொதுமக்கள் மத்தியில் தனது பொன்னான இரகசியத்தை தெரிவித்துக்கொண்டிருந்த அமைச்சர், திடீரென பௌத்த விவகார அமைச்சின் செயலாளரைச் சுட்டிக்காட்டி, 'இதோ இந்த செயலாளரது மனைவிதான் இலங்கைக்கு பென்ஷுய் சிலைகளை இறக்குமதி செய்கிறார்' என்று கூறினார்.

அத்துடன், 'தானும் பென்ஷுய் சிலைகளை வணங்கி வருவதாக தெரிவித்த அமைச்சர், அவற்றின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகவெ தங்க நகைகளையும் அணிந்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டார். (காஞ்சன குமார)
Views: 3858

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.