செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014
 

ஆர்தர் வாமணனின் அடிப்படை உரிமை மீறல் மனு வாபஸ்


                                                                              (ரி.பாருக் தாஜுதீன்)

தனது கட்சிக்காரான ஊடகவியலாளர் ஆர்தர் வாமணன் பிழையான முறையில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ஆர்தர் வாமணன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரொமேஷ் டி சில்வா நேற்று உயர் நீமன்றில் தெரிவித்தார்

ஆர்தர் வாமணனை கைது செய்தமை தவறானது என்பதால் அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ்பெறுவதால் அவர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக வழக்குரைஞர் கூறினார்.

அமைச்சர் மனோ விஜேரட்னவின் மனைவியின் தொலைபேசி கட்டணத்தை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் நிதியிலிருந்து செலுத்தியதாக செய்தி வெளியிடப்போவதாகவும் அதை நிறுத்த வேண்டுமாயின் தனக்கு 5 மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டுமெனவும் ஆர்தர் வாமணன் கோரியதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்த வழக்கை பொலிஸார் வாபஸ் பெற்றுவிட்டனர் என ரொமேஷ் டி சில்வா கூறினார். இந்த கூற்றை அரச வழக்குரைஞர் எஸ்.ஹேரத்தும் உறுதிப்படுத்தினார்.

அதையடுத்து இம்மனு செலவுத் தொகையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது.

அமைச்சர் விஜேரட்னவின் முறைப்பாட்டையடுத்து 25.10.2007 ஆம் திகதி ஆர்தர் வாமணன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மறுநாள் கல்கிஸை நீதவான் திருமதி அயெஷானி ஜயசேன அவரை ஒரு லட்சம் ரூபா சரீ பிணையில்செல்ல அனுமதித்தார். அப்போது, சமூக நலனுக்காக தனது கடமையின்போது ஊழலை அம்பலப்படுத்திய ஒரு ஊடகவியலாளருக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டுகளை கூறி நீதிமன்றத்தை பிழையாக நடத்தக்கூடாதென குற்றப் புலனாய்வுப் பிரிவினரை நீதிவான் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.


Views: 1458

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.